728x90 AdSpace

  • Latest News

    வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பெருமளவில் மீன்கள்


    வெள்ளவத்தை கடற்கரைபகுதியில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமைக்கு காரணம் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி அல்ல என்று நாரா நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அனில் பிரேமரத்ன தெரிவித்தார்.
    வெள்ளவத்தை கடற்கரையோர பிரதேசத்தில் வழமைக்கு மாறாக பெருமளவு மீன்கள் நேற்று காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக பேராசிரியர் அனில் பிரேமரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்,
    கடற்பேரலை என்ற சுனாமி பேரலை ஏற்படவேண்டுமாயின் கடலின் ஆழமான பகுதியில் அல்லது கரையோரப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவேண்டும். கடற்பகுதியில் 10 தொடக்கம் 20 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் தான் சுனாமி நிலைமை ஏற்படும். அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மீன்கள் பெருமளவில் கரைக்கு வருவதையிட்டு மீனவர்களோ பொதுமக்களோ அச்சம்கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    வெள்ளவத்தை கடற்கரையோரபிரதேசத்தில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிறேமலால் கருத்து தெரிவிக்கையில்,
    கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாகவே இவ்வாறு மீன்கள் கரைக்கு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பெருமளவில் மீன்கள் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top