728x90 AdSpace

  • Latest News

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும்



    இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும் என ஜோர்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது

    ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அங்கீகரித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோர்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என, அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம், ஜோர்தானின் அமைச்சர் ஐமன் சஃபாடி தெரிவித்துள்ளார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஜனாதிபதி ட்ரம்ப் இந்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ட்ரம்பின் மருமகனான ஜாரட் கூஷ்னர் தெரிவித்துள்ளார்.

    இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜோர்தானின் அமைச்சர் ஐமன் சஃபாடி, “ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த முடிவு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு, எரிபொருள் பதற்றத்தை உருவாக்கி, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை பாதிக்கும் வகையில் அமையும் எனக் கூறியுள்ளார்.

    ட்ரம்ப் இவ்வாறு எந்த முடிவையும் அறிவிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சர்வதேச ஆதரவை திரட்டும் முயற்சியில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ். ஈடுபட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஃபிரெஞ்ச் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக பாலஸ்தீன ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும் Rating: 5 Reviewed By: Airtec Solution
    Scroll to Top