728x90 AdSpace

  • Latest News

    சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்


    கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிள்ளது.
    நாடு முழுவதிலும் ஐயாயிரத்து 116 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், இம்முறை 6 இலட்சத்து 88 ஆயிரத்து 536 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
    பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாவதால் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது.
    அத்துடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்து செல்ல வேண்டாம் எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
    இம்முறை பரீட்சை கண்காணிப்பிற்கதக 50 ஆயிரம் ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
    பரீட்சைகள் தொடர்பான முறைபாடுகளை அறிவிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையக தொலைபேசி இலக்கமான 011 2 242 11 11 என்ற இலக்கத்திற்கு முறைபாடுகளை அறிவிக்க முடியும்.
    இதேவேளை இரகசியமாக, தகவல்களை அறிவிப்பதற்கான தொலைநகல் இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0112 88 52 20 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு தொலைநகலை அனுப்ப முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
    பரீட்சைகள் தொடர்பில் ஏதும் முறைப்பாடுகள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்று அது தொடர்பில் முறையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
    பரீட்சைகள் மத்திய நிலையங்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரிகள் 15000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    இந்நிலையில், பரீட்சை மத்திய நிலையங்களில் 15 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    இதேவேளை ரயில் பருவகால சீட்டுக்களை பயன்படுத்தும் சாதாரண தரப்பரீட்சார்த்திகளுக்கு தனியார் பஸ்களில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ஜி ஹேமச்சந்திர தெரிவித்தார்.
    இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களிலும் மாணவர்கள் இன்று பயணிப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top