728x90 AdSpace

  • Latest News

    37 வருடங்களின் பின் சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு தடை நீக்கம்


    சவுதி அரேபியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டில் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    சுமார் 37 வருடங்களுக்குப் பிறகு அந்த தடையை நீக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.
    அதன்படி, அடுத்த வருடம் முதல் அந்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.
    முதற்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சவுதி அரேபியா முழுவதும் 300 திரையரங்குகள் செயற்படத் தொடங்கும் என தெரிகிறது.
    இதன்மூலம் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கைகளை ஒலி, ஒளி ஊடகத்திற்கான ஆணையம் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு கலாசார மற்றும் தகவல்துறை அமைச்சர் அவ்வாட் பின் சலேஹ் அலாவாட் தெரிவித்துள்ளார்.
    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களையும் சமூக மாற்றங்களையும் அமல்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 37 வருடங்களின் பின் சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு தடை நீக்கம் Rating: 5 Reviewed By: Airtec Solution
    Scroll to Top