728x90 AdSpace

  • Latest News

    வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels Motor Show”கண்காட்சி...


    உலகில் தலைசிறந்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அதிசிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு, இத்தகைய அளவில் இடம்பெறும் ஒரேயொரு நிகழ்வான LB Big Wheels Motor Show, 2018 மே 18,19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கொழும்பு 7 தாமரைத் தடாகத்தில் மு.ப 10 முதல் பி.ப 10 மணி வரை இடம்பெறவுள்ளது.

    இலங்கையில் புத்தம்புதிய (brand new) மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட (reconditioned) வாகன இறக்குமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமைப்பான இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கையிலுள்ள மிகவும் நம்பிக்கைமிக்க நிதி நிறுவனங்களுள் ஒன்றான LB Finance ஆகியன இணைந்து இந்த அங்குரார்ப்பண LB Big Wheels Motor Show நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
    இந்த வாகன கண்காட்சி நிகழ்வில் பல்வேறு வகைப்பட்ட சிறிய கார்கள், சொகுசு கார்கள், அனைத்து அளவுகளையும் கொண்ட SUV வாகனங்கள், வலுவான ஜீப்கள் மற்றும் சூப்பர்கார்கள் என பலதரப்பட்ட வாகனங்கள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் 35 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்களுடன், hybrid மற்றும் மின்சாரத்தில் இயங்குபவை உட்பட மொத்தமாக 200 இற்கும் மேற்பட்ட புத்தம்புதிய மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட வாகன வகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

    ஐரோப்பா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்து முன்னணி தயாரிப்புக்கள் மற்றும் வடிவங்கள் நிகழ்வில் இடம்பெறவுள்ளன. வாகன ஆர்வலர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமான, நாட்டிலுள்ள மிகச் சிறந்த பழைய காலத்து கார்கள் சிலவற்றின் பரந்த தெரிவும் இந்நிகழ்வில் அடங்கியுள்ளது.

    இலங்கையிலுள்ள ஏனைய மோட்டார் கண்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் LB Big Wheels Motor Show வேறுபடுவதற்கு பிரதானமாக இரு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கண்காட்சியில் இடம்பெறவுள்ள அனைத்து வாகனங்களும் உள்நாட்டுச் சந்தைக்காக முறையே அந்தந்த நாடுகளில் தயாரிக்கப்பட்ட வடிவங்களாக உள்ளன. உலகெங்கிலுள்ள வாகன தயாரிப்பாளர்கள் தமது உள்நாட்டு சந்தையை மையப்படுத்தியே மிகச் சிறந்த தரத்திலான வாகனங்களை தயாரித்து வருவது பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு விடயமாக உள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களாக உள்ள உபயோகிக்கப்பட்ட கார் முகவர்கள் முறையே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அவற்றின் உள்நாட்டு வடிவங்கள் மற்றும் வகைகளை இறக்குமதி செய்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பில் அவை மிகச் சிறந்த தரத்திலானவை. ஆகவே, இலங்கையில் வர்த்தக முகவர்களால் இறக்குமதி செய்யப்படுகின்ற ஏற்றுமதிச் சந்தை வடிவங்களிலும் பார்க்க அவை அதிசிறந்தவையாக காணப்படுகின்றன. இரண்டாவதாக, இந்நிகழ்வின் போது, தற்போதைய சந்தை வீதங்களிலும் பார்க்க விசேட வீதங்களுடன்ரூபவ் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு விசேட சலுகைகள் மற்றும் வழங்கல்களையும் LB Finance வழங்கவுள்ளது.

    பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான ரஞ்சன் பீரிஸ் உரையாற்றுகையில்,
    “இலங்கையில் புத்தம்புதிய மற்றும் மறுவடிவமைப்புச் செய்யப்பட்ட வாகன இறக்குமதியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணிக் குரலாக மாறும் நோக்குடன் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இத்தகைய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்யும் எமது கன்னி முயற்சியாக LB Big Wheels Motor Show அமைந்துள்ளது. வெறுமனே மற்றுமொரு சாதாரண மோட்டார் கண்காட்சி நிகழ்வாக இது அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். ஆகவேரூபவ் எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் தருவிக்கின்ற அதியுச்ச தரத்திலான புத்தம்புதிய மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள நுகர்வோருக்கு அறிவூட்டுவதை உறுதிசெய்யும் முயற்சியில் நாம் கவனம் செலுத்தியுள்ளதுடன் இந்நிகழ்வின் பிரதான அணுசரனையாளரான LB Finance மூலமாக நிகழ்வில் கிடைக்கின்ற விசேட சலுகைகள் மற்றும் வழங்கல்களை சிறப்பாகப் பயன்படுத்தி,  தமது கனவு வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்வதற்கும் நாம் வழிகோலியுள்ளோம். 

    இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களும் Euro-6 தர நடைமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என நாம் உறுதியாக நம்புவதுடன் அத்தகைய தரச்சான்றுடன் அதியுயர் தர வாகனங்களை நியாயமான விலைகளில் கொள்வனவு செய்வதற்கு இந்த மோட்டார் கண்காட்சி அனைவருக்கும் இடமளிக்கும்” என்று குறிப்பிடடார்.

    வாகன இறக்குமதியாளர்களின் நலன்களைப் பேணி அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்குடன் 1984 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கமானது இலங்கையில் வாகன இறக்குமதியாளர்களின் முன்னணி பிரதிநிதித்துவ அமைப்பாகத் திகழ்ந்து வருகின்றது. வாகன இறக்குமதி தொழிற்துறையின் ஆலோசகராக இது செயற்பட்டு வருவதுடன் தனது அங்கத்தவர்கள் மற்றும் இலங்கை நுகர்வோரின் நலன் சார்ந்த முற்போக்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. நாட்டிலுள்ள 132 முன்னணி இறக்குமதியாளர்கள் இச்சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels Motor Show”கண்காட்சி... Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top