728x90 AdSpace

  • Latest News

    ஈரான் ஆன்மீகத்தலைவர் மற்றும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு…


    ஈரானிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கும் (Ayatollah Ali Khamenei) இடையில் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.
    டெஹரான் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்தார்.
    ஈரானின் ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிகாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தி, சகோதர நாடுகளாக முன்னோக்கி செல்ல காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஈரானிய ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
    இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஆன்மீகத் தலைவர் என்ற வகையில் அவர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டியதுடன், பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமே இலங்கையில் காணப்படுவதுடன். சமயக் கோட்பாடுகளின் ஊடாகவே சமூகத்தை நல்வழிப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.
    ஈரானுக்கு அரசமுறை விஜயம் மேற்கொள்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, விருந்தோம்பல் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது ஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஈரான் ஆன்மீகத்தலைவர் மற்றும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு… Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top