728x90 AdSpace

  • Latest News

    "ஆடை உருவப்பட்ட என் மகள் மீண்டு வருவாள்; அவர் மருத்துவர் ஆகவேண்டும்"


    "மிருகங்களை வேட்டையாடுவதைவிட மோசமான வகையில் அவர்கள் என் என் பேத்தியின் ஆடைகளை கிழித்து கொடுமை செய்துள்ளனர். எப்போதும் என்னுடன் தூங்கும் அவள் சம்பவ தினத்தன்று அழுதுகொண்டே படுத்திருந்தார். நான் எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை அவள் கூறவில்லை. இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி போலீசார் எங்களது வீட்டிற்கு வந்தபோதுதான் இதுகுறித்து எங்களுக்குத்தெரியவந்தது. இந்த மோசமான செயலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும்."

    இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு நான் சென்றபோது அங்கிருந்த அனைவரும் அழுதுகொண்டிருந்ததால் என்னால் அவர்களுடன் இதற்குமேல் கலந்துரையாட முடியவில்லை.
    சமீபத்தில் நாடு முழுவதும் வைரலானது இளம்பெண் ஒருவரின் ஆடையை சில ஆண்கள் கிழிக்கும் காணொளி. அந்த இளம்பெண்ணின் 70 வயதாகும் பாட்டியை ஜஹானாபாத்தில் சந்தித்தோம்.
    "எனது மகனுக்கு இதுவரை தெரியாது"
    இந்த மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட என் பேத்தி, என் மகன் வழிப் பேத்தி. டெல்லியில் தனது சகோதரர் வீட்டில் வசித்துக்கொண்டு ரிக்ஷா ஓட்டும் எனது மகனுக்கு இதுவரை இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கவில்லை.
    70 வயதாகும் இந்த மூதாட்டி தன்னுடைய கணவர், மூன்று மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஜஹானாபாத்தில் வசித்து வருகிறார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இந்த ஒட்டுமொத்த குடும்பத்திலேயே இளையவர் என்பதுடன், பள்ளிக்கு செல்லும் ஒரே பெண்ணாவார்.


    தேசிய நெடுஞ்சாலை 83ஐ ஒட்டியுள்ள ஜஹானாபாத்தின் குறுகிய சந்திலுள்ள இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றேன்.
    கிட்டத்தட்ட 400 வீடுகள் உள்ள இந்தப் பகுதியில் ரவிதாஸ் என்று அழைக்கப்படும் தலித் சமூகத்தவர் பெருமளவில் வசிக்கின்றனர். ரவிதாஸ் சாதியை சேர்ந்த தலித்துக்களை மகா தலித் என்னும் பிரிவில் வைத்துள்ளது பீகார் மாநில அரசு. தலித்துக்களுக்கு அடுத்தபடியாக இந்த கிராமத்தில் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறிய அளவில் உள்ளனர்.
    பல வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் தலித்துக்கள் வசிக்கும் இந்த இடத்தை அவர்களுக்கு வழங்கினர். எனவே, அவர்களிடம் நிலத்துக்கு உரிமைகோரும் ஆவணங்கள் ஏதுமில்லை. மேலும், இவர்கள் எலி பிடித்தும் மற்றும் தினக்கூலி வேலைக்கு சென்றும் தங்களது பிழைப்பை நடத்துகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: "ஆடை உருவப்பட்ட என் மகள் மீண்டு வருவாள்; அவர் மருத்துவர் ஆகவேண்டும்" Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top