728x90 AdSpace

  • Latest News

    ஐ.நாவின் புதிய தடை: வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90% குறையும்

    வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது.
    அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதியை 90% வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
    வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
    ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
    • வட கொரியாவுடன் இன்னும் தொடர்பில் இருக்கும் நாடுகள் எவை?          2008 ஆம் ஆண்டு முதல் வட கொரியா மீது அமெரிக்கா தடைகளை விதித்து வருகிறது. வட கொரியாவின் அணு திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் சொத்துக்களை முடக்கியது, அந்நாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது என அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது.
    • ''வட கொரியா மேலும் தனது செயலைத் தொடர்ந்தால் அது மேலும் தண்டனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் என்ற தெளிவான செய்தி இந்த பொருளாதாரத் தடை மூலம் வட கொரியாவுக்கு அனுப்பட்டுள்ளது'' என அமெரிக்காவுக்கான ஐ.நாவின் தூதர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
      வட கொரியா
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஐ.நாவின் புதிய தடை: வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90% குறையும் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top