728x90 AdSpace

  • Latest News

    சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு



    சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

    கடந்த மூன்று மாதங்களாக இந்த விலை அதிகரிப்பு தொடர்வதாக அரிசி வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகளிலேயே அதிக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

    அரிசி விற்பனையின் ஏற்பட்டு வீழ்ச்சியே விலை அதிகரிப்பிற்கான காரணம் என மரதஹமுல அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    கடந்த மூன்று மாதங்களாக நிலவிய கடும் வறட்சி மற்றும் மழையுடனான வானிலையினால் மூன்று போகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களிடம் மேலதிக அரிசி களஞ்சியத்தில் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் 500 இற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக மரதஹமுல அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: Airtec Solution
    Scroll to Top