728x90 AdSpace

  • Latest News

    திறனொளியின் திறமைக்கான தேடல் கலை கலாசார இலக்கிய நிகழ்வு


    சம்மாந்துறை திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய திறனொளியின் திறமைக்கான தேடல் கலை கலாசார இலக்கிய நிகழ்வு அண்மையில் கமு/சது/அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாத் அவர்களின் நெறிப்படுத்தலுடன் அமைப்பின் ஆலோசகரர் கலாபூஷணம் கலைவேள் மாறன் யூ ஸெயின் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் திறனொளி வருடாந்த சஞ்சிகை, துறை மண்ணின் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய 'படைப்பாளர்களின் குரல்கள்' கவிதைத் தொகுதி இறுவெட்டு என்பன வெளியிட்டு வைக்கப்பட்டதோடு ரமழான் வசந்தம் கேள்வி பதில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழும், சிறுவர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றிய சிறுவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

    இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர் கலந்து சிறப்பித்ததுடன் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், அதிதிகளாக கலாசார உத்தியோகத்தர் தேசமான்ய றஸ்மி மூஸா, வசந்தம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் எம்.ஜே.எம்.சுக்ரி, ஏ.எம்.ஜெஸீம், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலை ஆர்வலர் ஏ.முஸ்ற்றாக் அலி, சிரேஷ்ட கவிஞர் மன்சூர் ஏ காதிர், திறனொளி சஞ்சிகையின் ஆசிரியர்கள் கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸீக், ஏ.அபூபக்கர், சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.முஹம்மட் தம்பி, சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ஏ.ஜே.காமில் இம்டாட், சம்மாந்துறை ஓய்வூதியர் நலன்புரி சமூக சேவைச் சபை தலைவர் ஏ.எல்.எம்.யாஸீன், உட்பட துறையூரின் மூத்த இலக்கியவாதிகள், கவிஞர்கள், கவிஞினிகள்,  கல்விமான்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், அமைப்பின் கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: திறனொளியின் திறமைக்கான தேடல் கலை கலாசார இலக்கிய நிகழ்வு Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top