728x90 AdSpace

  • Latest News

    ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: விண்வெளி வீரர்கள் தப்பியது எப்படி?

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர்.
    கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.
    இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்ட இந்த ட்வீட்.திட்டமிட்டபடி சென்றிருந்தால் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கே சென்று சேர்ந்திருக்கவேண்டும்.
    ஏவப்பட்டபோது, ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் உள்ள விண்வெளி வீரர்கள் அதில் இருந்து பேலிஸ்டிக் இறங்கு வாகனம் மூலம் புவிக்குத் திரும்பியதாகவும் 'நாசா' தெரிவித்துள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: விண்வெளி வீரர்கள் தப்பியது எப்படி? Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top