728x90 AdSpace

  • Latest News

    காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது- 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பு.



    பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி விவகாரத்தில் இப்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் பங்கேற்று தமிழக அரசின் கருத்துக்களை முன்வைத்து, நீர் திறப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார். இதேபோல் புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகளும் பங்கேற்று தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர். 

    இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. 
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது- 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பு. Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top