2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்களை இம்மாதம் 31ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல். சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.
அதன்படி, அன்றைய நாள் நள்ளிரவுக்கு பின்னர் தனியார் வகுப்புக்களை நடாத்துவது, பிரச்சாரங்கள் மேற்கொள்வது மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
2018 -கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவு பெறவுள்ளதோடு, பரீட்சைகளுக்காக பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் 321,469 பேர் விண்ணப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.