728x90 AdSpace

  • Latest News

    முஹாசபா விருது விழாவும், காத்தவூர்க்கவியின் "முத்தொளி" கவிதை நூல் வெளியீடும்.


    காத்தவூர்க் கவி, பஹ்த் எம். ஜுனைட் எழுதிய " முத்தொளி " கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும், முஹாசபா விருது வழங்கல் 2018  நிகழ்வும் கடந்த 2018/07/29ம் திகதி காலை 8.30 மணியளவில் காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் A. அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.  கிழக்கிலங்கையின் பிரபல சமூக சேவைகள் அமைப்பான முஹாசபா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முஹாசபா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஜனாப் ஜுனைட் .எம். பஹத் தலைமை தாங்கினார்.

    பிரதம அதிதிகளாக இலங்கை வானொலி புகழ் பூத்த மூத்த அறிவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்பு  கூட்டுத்தாபன முன்னாள்  பணிப்பாளர் சபை உறுப்பினரும,கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வானொலிப் பிரிவின் ஆலோசகர் மயில் வாகனம் சர்வானந்தா  அவர்களும் விசேட அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் முன்னாள்  ஊடக செயலாளரும் இலங்கைத் தமிழோசை வானொலி முகாமைத்துவ பணிப்பாளருமான கலைஜோதி .எம்.ஜெஸீம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஓட்டமாவடி தாருஸ் ஸலாம் அரபு கலாசாலை அதிபர் M.I.இஸ்மாயில்(மதனி),  முஹாசபா சரியா பிரிவு ஆலோசகர்  மௌலவி எம்.மசூத் அஹமத் ( காசிமி ) அல்ஹாஜ் K.M.M.பிலால், எப் .எம் மீடியா யுனிட் பணிப்பாளர் M.I.A.மஜீத், காத்தான்குடி மீடியா போரம் உறுப்பினர்கள் மற்றும் அதன்  செயலாளர் எம்.எஸ்.சஜீ, டெலி தமிழ் வலையமைப்பின் உறுப்பினர்கள் மொகம்மட் ரினோஸ், முகம்மது ஷாஜஹான்,    கவிஞர் மதியன்பன் மஜீத்  உட்பட ஏராளமான உலமாக்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், புலம் பெயர் எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

    நூலின் முதல் பிரதியை கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வானொலிப்  பிரிவின் ஆலோசகர் மயில் வாகனம் சர்வானந்தா அவர்கள்  நூலாசிரியர் ஜுனைட் எம். பஹத் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். நூல் வெளியீட்டுரையினை ஈஸ்ட் லங்கா சஞ்சிகை பிரதம ஆசிரியர் மஸாகி அவர்களும் நூலாசிரியர் பற்றிய அறிமுக சிறப்புரையினை இலங்கை தமிழோசை முகாமைத்துவ பணிப்பாளர் .எம்.ஜெஸீம் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

    கலை இலக்கியத்துறையில் தடம் பதித்து வரும் காத்தவூர்க்கவி ஜுனைட் எம்.பஹத் அவர்களின் முதல் படைப்பான முத்தொளி எனும் இக்கவிதை தொகுதியில் சுமார் ஐம்பத்தி ஐந்து கவிதைகள் இடம்பிடித்திருப்பதும் குறிப்பிட தக்கதாகும்
      
     















    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: முஹாசபா விருது விழாவும், காத்தவூர்க்கவியின் "முத்தொளி" கவிதை நூல் வெளியீடும். Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top